
அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்த சினேகா, பிரசன்னா இருவரும் காதல் வயப்பட்டு அனைவரின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு பிரசன்னாவும், சினேகாவும் சேர்ந்து கேம் சேஞ்சர் என்டர்டெயின்மென்ட் என்று பட நிறுவனத்தை தொடங்கினர். இப்போது இவர்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக டோனாவூர் ராதா என்ற படத்தை தயாரிக்கின்றனர்.
இதில் என்ன விஷேசம் என்றால் சினேகா, பிரசன்னா ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனராம். இப்படத்தை பாண்டியராஜின் உதவியாளராக பணியாற்றிய லக்ஷ்மிராமு இயக்குகிறார்.மேலும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண்வைதியநாதன் இயக்கும் படத்தையும் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் பிரசன்னா நடிக்க, மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனராம்.





