வவுனியாவை வந்தடைந்த திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி : மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!!

1063


தியாகத் தீபம் திலீபன்..தியாகத் தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (19.09) வவுனியாவை வந்தடைந்த நிலையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி செல்கின்றது.
5 ஆம் நாளான இன்று (19.09) குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில், வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம், பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட தளம்,


மொத்த மரக்கறி விற்பனை நிலையம், இலுப்பையடி என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஊர்தியில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு தீபம் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அகவணக்கத்துடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், சில பகுதிகளில் மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.