தலை இல்லாமல் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

416


மகாராஷ்டிராவில்..இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் வசாய்,புய்கான் கடற்கரையில் தலை இல்லாத பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாலச்சோப்ராவில் சானியா சேக் (25) என்ற பெண் மயமானது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்,
பொலிஸாருக்கு கிடைத்த உடல் அப்பெண்ணுடையது தான் என்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் ஆசிப் சேக்கை (31) பொலிஸார் கைது செய்தனர்.


அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். சானியா சேக்கின் உடல் கைப்பற்றப்பட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஆசிப் சேக் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்த விவகாரத்தில் குடும்பத்தினர் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து சானியா சேக் கொலை வழக்கில் ஆசிப் சேக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.