கல்லுக்குள் ஈரம் : சோகமே முடிவான ஒரு ரவுடியின் காதல் கதை : மனைவி இறந்த நாளில் அதே மாதிரி மரணம்!!

391


சென்னையில்..சென்னை சூளைமேடு அருகே தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கணவரும், சென்னையில் பிரபல ரவுடியுமான பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி குளோரி. பிரசாந்த் அப்பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்த பின் ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


நள்ளிரவில் உடல் அடக்கம் ரவுடி பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவுடி பிரசாந்த் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது நெகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியானது.


தீக்குளித்து தற்கொலை அதாவது பிரசாந்த் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.

தானும் தற்கொலை இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இவரது சகோதரர் பிரதீப் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் காவல் கட்டுப்பாட்டறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, உடலில் தீக்காயத்துடன் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் அனுமதித்தனர்.

மனைவியின் நினைவு ரவுடி பிரசாந்த், கடந்த ஓர் ஆண்டாக மனைவியின் ஞாபகமாகவே இருந்து வந்துள்ளார் எனவும் எப்போதும் மனைவியை பற்றியே சக நண்பர்களிடத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலவே ரவுடி பிரசாந்தும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்உடலில் 67 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.