டயர்களினால் எரியூட்டப்பட்ட காலத்தை மக்கள் மறக்கவில்லை : ஜனாதிபதி!!

595

Mahinda

சட்டத்தினால் மட்டும் பண்பான சமூகத்தை உருவாக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்பான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு விஹாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் போன்ற மத வழிபாட்டுத் தளங்களின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சிலர் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் இளைஞர், யுவதிகள் டயர்களினால் எரியூட்டப்பட்ட காலம் மறந்து போய்விட்டது. எனினும், டயர் காலத்தை மக்கள் மறந்துவிடவில்லை.

இன்று நாட்டு மக்கள் அச்சமும் பீதியும் இன்றி வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிலாபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.