இறந்த மகனுக்கு இறுதிச்சடங்கு : மீண்டும் உயிர் வந்துவிட்டதாக சொன்ன குடும்பத்தார்.. பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

374


இந்தியாவில்..



இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி விம்லேஷ் என்பவர் வருமான வரி துறையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இறப்பு சான்றிதழ் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.




பின்னர் குடும்பத்தார் இறுதிச்சடங்குக்கு தயார் செய்தனர், சில மணி நேரம் கழித்து உயிரிழந்த விம்லேஷுக்கு உயிர் வந்துவிட்டது என தெரிவித்தனர். பின்னர் அவர் கோமாவில் உயிருடன் இருப்பதாக கருதி சடலத்தை துணியால் போர்த்தி வைத்திருக்கின்றனர்.


தற்போது இந்த விடயம் வெளியில் தெரிந்த நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றினார்கள். அப்போது விம்லேஷின் தந்தை பொலிசாரிடம், ஏப்ரல் 2021 இல், என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, ​​அவருக்கு நாடித் துடிப்பு இருந்ததையும், இதயத் துடிப்பும் இருந்ததையும் நாங்கள் கவனித்தோம் எனவே நாங்கள் அவரை எரிக்கவில்லை.


என் மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று கூறி அதிர வைத்துள்ளார். பின்னர் பொலிசாரும், மருத்துவர்களும் விம்லேஷ் குடும்பத்தாரிடம் நிலைமையை எடுத்து கூறிய நிலையில் சடலத்தை தகனம் செய்ய ஒப்பு கொண்டுள்ளனர்.