ஒரே வீட்டில் 3 மனைவிகள்.. சண்டையே போடாமல் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்!!

601


இணையத்தில்..இணையத்தில் அவ்வப்போது பல நிஜ நிகழ்வுகள் தொடர்பான வினோத செய்திகள் அதிகம் ரவுண்டு அடிக்கும். அதில் சிலவற்றை நாம் கேள்விப்படும் போது நிச்சயம் நமக்கு அதிக அளவில் வியப்பை கொடுக்கும் செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.அப்படி ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பேசு பொருளாகவும் மாறி உள்ளது. காங்கோ குடியரசு என்னும் நாட்டை சேர்ந்தவர் Ombeni. இவர் மொத்தம் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்.
இதில், இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்று பெண்களும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது தான். கிறிஸ்டினா என்ற பெண்ணை முதலாவதாக Ombeni திருமணம் செய்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டினாவின் சகோதரியான ஈலின் என்பவரையும் திருமணம் செய்ய Ombeni விருப்பம் கொண்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரியையே கணவர் திருமணம் செய்ய விரும்பிய போதும், கோபப்படாத மனைவி கிறிஸ்டினா, இதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மூன்றாவது சகோதரியான டூமா என்பவரையும் Ombeni திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் Ombeni வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையே இதுவரை எந்த விஷயத்திலும் சண்டை ஏற்பட்டதே இல்லை என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து பேசும் முதல் மனைவி கிறிஸ்டினா, இதை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களின் கணவர் சிறந்த முறையில் அனைவரையும் பார்த்துக் கொள்வதுடன் சமமாக அன்பை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், Ombeni மற்றும் மூன்று மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 14 பேரும், Ombeni குடிசை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், குடும்பத்தினர் அனைவருக்காகவும் தனியாளாக Ombeni உழைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனக்கு மூன்று மனைவிகள் இருப்பது பற்றி பேசும் Ombeni, என்னை பற்றி மக்கள் பலரும் பல விதமாக கருத்து கூறுகிறார்கள் என்றும், ஆனால் நாங்கள் அது எதையும் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம் என்பது தான் எங்களுக்கு முக்கியம் என்றும் Ombeni குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மனைவிகள் இருந்த போதிலும் எந்தவித பிரச்சனையும் இன்றி, அனைவருடனும் இணக்கமாக வாழ்ந்து வரும் கணவர் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.