வீடியோ எடுத்து மிரட்டியதால் பலரை மணந்தேன் : 7வது திருமணத்திற்கு பட்டு சேலையில் வந்த பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!

296


தமிழகத்தில்..தமிழகத்தில் ஒன்றரை ஆண்டில் 6 திருமணம் செய்து கொண்டு ஏழாவது திருமணத்துக்கு தயாரான போது சிக்கிய பெண் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில், 9ம் திகதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை.
பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதற்கிடையே சந்தியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் இடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.


இதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார். சந்தியா திருமணத்திற்கு வந்தபோது அவரையும், அவரது தோழி தனலட்சுமி உள்ளிட்டோரை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், சந்தியா கடந்த 1½ ஆண்டில் மட்டும் 6 பேரை திருமணம் செய்து, கைவரிசை காட்டி இருப்பதும், 7-வது திருமணத்திற்கு முயன்றபோது சிக்கி இருப்பதும் தெரியவந்தது.


கைதான சந்தியா நேற்று பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதில், திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், எனது நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால், நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர்.

திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து பின்னர் பணம், நகைகள், பொருட்களை எடுத்து ஓடி விடுவோம். கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் பொலிசில் புகார் கொடுத்துள்ளேன்.

ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியிருக்கிறார். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.