ஒரு பெண்ணுக்கு இரு முறையற்ற காதல்… போட்டா போட்டியில் நடந்த கொலை!!

228


விருகம்பாக்கத்தில்..சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜி (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரே வீட்டில், இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் நேற்று இரவு, வீட்டில் இருந்த விஜி மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் கிடைத்து, விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சவுந்தர்யாவின் பிள்ளைகளிடம் விசாரித்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், விஜியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.


பின்னர், எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் கடைக்கு சென்று விட்டோம் என முன்னுக்கு பின் முரணாக பேசினர். போலீசார் சந்தகமடைந்து, சவுந்தர்யாவின் செல்போனை வாங்கி பார்த்ததில், பிரபு என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின. கோடம்பாக்கம், காமராஜ் காலனியை சேர்ந்த பிரபுவுக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.


அந்த விவகாரம் விஜிக்கு தெரிந்து, பிரபுவை மிரட்டி வந்துள்ளார். மேலும், சவுந்தர்யா, அவரின் பிள்ளைகள் இருவரை மிரட்டி, கொடுமை படுத்தி வந்துள்ளார். இதனால், சவுந்தர்யா, பிரபு ஆகியோர் ஒன்று சேர்ந்து, பிரபுவை கொன்றது தெரியவந்தது.

கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயின் கள்ளகாதலால் நடந்த கொலை சம்பவத்தில் தற்போது பிள்ளைகள் இருவரும் அனாதையாக நிற்கும் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.