வவுனியா வசந்தன் குடியிருப்பு ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி!!(படங்கள்)

348

வவுனியா வசந்தன் குடியிருப்பு ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் விருந்தினர்களை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், விருந்தினர்களது உரைகள், போன்ற நிகழ்வுகளும் மாணவர்களது விளையாட்டுகள், பெற்றோருக்கான விளையாட்டுக்கள், மற்றும் வினோதவுடை போன்றன நடைபெற்றது.

ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடை பெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஜெபாலைய மிசன் சபையின் விசப் எஸ்.சந்தணப்பிள்ளை, போதகர் கோ. யேசுதாஸ், பாராளுமன்ற உறுப்பினர் வினோ, தமிழ் தேசிய முன்னணி (ஈரோஸ்) அமைப்பின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் கார்திக், செந்தில்நாதன் மயூரன், அண்ணாநகர் பாடசாலையின் அதிபர், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.றோன் கனிசியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வவுனியா மாவட்ட தமிழ் தேசிய முன்னணி (ஈரோஸ்) அமைப்பால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

22 23 24 25 26 27 28 29 30 31