
அரச நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழி பிழையாக எழுத்தப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைளில் தமிழ் மொழியில் எழுத்தப்பட்டுள்ள அறிவுறுத்தல் பிழையாக எழுதப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ள அந்த அறிவிப்பு பலகையில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள அறிவிப்பு முற்றாக வேறு அர்த்தம் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
நாட்டில் இது போன்ற தவறுகள் இடம்பெற இடமளிக்கப் போவதில்லை எனவும், அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.





