ஆப்கானிஸ்தானில் மண்சரிவில் 350 பேர் பரிதாபமாக பலி!!(படங்கள்)

336

A1 A2 A3

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் நேற்று திடீரென்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டதில் 350 பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடைபெறும் மீட்பு பணியில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கு நேட்டோ படையினரின் உதவி கிடைத்து இருப்பதாகவும், காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் ஐ.நா.குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பவம் நடந்த இடத்துக்கு மீட்பு பணிக்காக பெரிய வாகனங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளன. இதில் வசித்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில் மொத்தம் உள்ள வீடுகளில் 75 சதவீத வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவி மற்றும் மண் தோண்டும் கருவிகள் இல்லாததால் அவர்களால் வேகமாக பணியைச் செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.