பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண் : அவசரமாக தரையிறக்கப்பட்ட லண்டன் விமானம்!!

296

Flight

36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் நைஜீரிய பெண்ணொருவர் குழந்தையை பெற்றுள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நைஜீரியாவில் இருந்து லண்டன் நோக்கி பறந்து கொண்டிருந்தது. அதில் நைஜீரியாவைச் சேர்ந்த கர்ப்பிணியான உஜுன்வா ஒஷே (31) தன் குழந்தையுடன் பயணம் செய்தார்.

விமானம் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது ஒஷேவாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் வந்தவர்கள் குழந்தையை பத்திரமாக பெற்றெடுக்க உதவினர். ஆறரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனே தரையிறக்க வலியுறுத்தப்பட்டது.

விமானியும் தாய் மற்றும் குழந்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்ததையும் பொருட்படுத்தாமல் தரையிறக்க முடிவு செய்தார்.

அப்போது விமானம் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவான பலேரிக் தீவுகளில் உளள் பால்மி டி மலோர்ஸ் என்ற விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி அந்த விமான நிலையத்தின் அதிகாரியை தொடர்பு கொண்டு விமானத்தை இறக்க ஒப்புதல் பெற்று விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

அங்கு தயாராக இருந்த அம்புலன்சில் தாயும் குழந்தையும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பறந்து சென்றது.