மக்களவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் : அழகிரி பரபரப்பு பேட்டி!!

744

Alagiri

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னால் மத்திய அமைச்சரான அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் திமுகவை மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென தனது ஆதரவாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நடக்கும் பலமுனை போட்டியில் திமுக 3 இடங்களை மற்றுமே பெற்று பலத்த சேதமடையப்போகிறது.

மேலும் அதிமுக சிறந்த ஆதாயம் அடையப் போகிறது என்றும், அதிமுக 25 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.