முல்லைத்தீவில் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி காணாமல் போன சோகம் : கதறும் தாய்!!

965

முல்லைத்தீவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமி 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாகவும், சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.



முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த துஸ்யந்தன் பூமிகா என்ற 9 வயது சிறுமியே தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 29.08.2022 அன்று யாழ்.பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றார்கள்.

இதன்போது, ​​குறித்த சிறுமி மற்றும் அவரது தந்தை சண்முகநாதன் துஸ்யந்தன் வயது 31 என்பவரும் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவந்துள்ளதுடன், தனது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை, ஐயன்குளம், அக்கராயன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலிஸார் சிறுமியை மீட்டெடுப்பதில் அக்கறை செலுத்தவில்லை என குறித்த தாய் கவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியின் எதிர்காலம் கருதி 074 2747603 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொது மக்களின் உதவியை அம்மா நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.