
வந்த காதல் அத்தனையும் இழந்து இப்போது தனி ஆளாக நிற்கிறார் சிம்பு. அவர் தனது காதல் தோல்விகள் பற்றியும், காதலைப் பற்றிய புதிய கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, எனக்கு இப்போது 30 வயதாகிறது. நானும் ரொம்ப சின்ன வயசிலிருந்தே லவ் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆட்டோகிராப் படத்துல 3 காதலிங்க இருப்பாங்க. ஸ்கூல், காலேஜ்னு அந்தப்பட ஹீரோவுக்கு 3 காதலிங்க இருக்கிறப்போ எனக்கு இருக்க கூடாதா?
உலகத்திலேயே முக்கியமான உணர்ச்சி காதல்தான். காதலிக்கும் போது நிறைய விஷயங்களை கத்துக்க முடியுது. அது நம்மோட வாழ்க்கைக்கு பாசிட்டிவாவோ, நெகட்டிவாவோ தேவைப்படுது. காதல்ல ஜெயிச்சது மூலமா சிலபேரோட வாழ்க்கை மாறியிருக்கு. காதல்ல தோற்றது மூலமாவும் சிலபேரோட வாழ்க்கை மாறியிருக்கு. எல்லோருக்குமே காதல் ஒரு அனுபவம்தான்.
பலர் அதை அனுபவிக்காமல், கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கிறாங்க. நான் அதை சரியாக உபயோகப்படுத்தியிருக்கேன். இவ்வாறு அரிய பெரிய கருத்துக்களை கூறியிருக்கிறார் சிம்பு.





