அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு : நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு!!

591

அரச ஊழியர்..

அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வேதன குறைப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்காக அரசாங்கம் மாதாந்தம் 119 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.

இதில் ஊழியர்களின் வேதனத்துக்காக 93 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்துக்கு 26 பில்லியன் ரூபாவும் செலவிடப்படுகிறது. வருடாந்தம் 1428 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்று ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

அதிகரித்துவரும், பணவீக்கத்துக்கு மத்தியில் ஏனையோரை போலவே அரச ஊழியர்களும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் சம்பளங்களை குறைத்து, அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.

எனவே, அரச ஊழியர்களின் பணியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளில் அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன அத்தியாவசியமானது எனக் கருத்திற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.