தனது உடலில் தீ வைத்து கொண்டு அரசியல்வாதியை கட்டிப்பிடித்த வாலிபர் : இறுதியில் இருவரும் பலி!!

555

Fire

தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உடலில் தீ வைத்து கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரை கட்டிபிடித்த வாலிபர் பலியானார்.

உத்திரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நகரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கம்ருஸ்ஸமா என்பவர் கலந்து கொண்டார்.

அங்குள்ள வாக்காளர்கள் மத்தியிலே அரசியல் தலைவர்கள் பேசும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திங்கள் கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட வாலிபர் ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை கட்டி பிடித்துக் கொண்டார்.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கம்ருஸ்ஸமா 75 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக தீக்காயம் அடைந்த வாலிபர் துர்கேஷ் குமார் சிங் பலியானார்.

காயம் அடைந்த கம்ருஸ்ஸமா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை பலியாகினார்.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கம்ருஸ்ஸமாவிற்கு 9 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கம்ருஸ்ஸமாவின் சகோதரர் பக்ஜி அரசியல் நோக்கத்துடனே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக முழு விசாரணை நடந்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.