61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் படமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் தேர்வானது.
அப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை எழுதிய முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், அதில் நடித்த சிறுமி சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இயக்குனர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. தர்மம் என்ற குறும்படம் சிறந்த தமிழ் குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது. வல்லினம் படத்துக்கு சிறந்த பட தொகுப்பாளருக்கான விருதுக்கு சபு ஜோசப் தேர்வாகியிருந்தார்.
இவ்வாறு தமிழ் படங்களுக்கு இந்த முறை 6 விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இயக்குனர் ராம் உட்பட அனைவருக்கும் நேற்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.





