
மேடைக் கச்சேரிகள் மட்டுமல்லாது ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் டிரம்ஸ் சிவமணி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் அரிமா நம்பி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் கின்னஸ் சாதனைக்காக 1000 டிரம்ஸ் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் சிவமணி வாசிக்கும் நிகழ்ச்சி சென்னை வய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த இந்த சாதனை நிகழ்ச்சி பாரத் புக் ஒப் ரெக்கோட் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார்.
இந்த மாபெரும் சாதனை நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு, கடம் வித்வான் விநாயக் ராம், நாதஸ்வர கலைஞர் பழனிவேல், இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி, சத்யா, தஷி, பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன், முகேஷ், இயக்குனர்கள் சண்முக சுந்தரம், ரவிச் சக்கரவர்த்தி மற்றும் ஏராளமான திரையுலகினரும், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.





