இலங்கையில் பாரிய மழை வீழ்ச்சிக்கான எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
கொழும்பில் இன்று வானிலை சீரற்றநிலையில் உள்ளது. பாரிய மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்புக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்குகிழக்கு மற்றும் மலையகம், தென்பகுதிகளிலும் மழை பெய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீரேந்து பகுதிகளில் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தோடுகின்றன. இதன் காரணமாக நீர்தேக்கங்களின் அவசரக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மழையால் பாதிப்புக்கள் நேரலாம் என்ற அச்சத்தில் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்கூட்டியே நிதி ஒதுக்கீட்டையும் தயார் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது





