கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் : ஜனாதிபதி!!

295

Mahinda

நாட்டின் கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகள் களையப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரை நிர்க்கதியாக்காத வகையிலான கல்வி முறைமை உருவாக்கப்படும்.

கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகளுக்கு அரசாங்கங்கள் பொறுப்பு சொல்ல வேண்டும். சிங்களம் தமிழ் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். நாட்டுக்கு அர்த்தமுள்ள பிரஜைகளை உருவாக்கக் கூடிய வகையிலான கல்விமுறைமை உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச பாடசாலைகளில் சிங்களம் தமிழ் மற்றும் வரலாறு பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

தாய் நாட்டை நேசிக்கும் தலைமுறையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.