மாலைதீவைச் சேர்ந்த தாயும் 6 வயது மகளும் இலங்கையில் மாயம்!!

585

Missing

இலங்கைக்கு சென்று கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த மாலைதீவைச் சேரந்த பெண் ஒருவரும் அவரது 6 வயது மகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினரை கோடிட்டு மாலைதீவு செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ரசீடா அஹ்மட் என்ற பெண்ணும் அவருடைய மகளும் மத்திய மாகாணம் கண்டியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே பெண் கணவரிடம் இருந்து பிரிந்து இலங்கையின் கண்டியில் வசித்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்திலும் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.