
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கரையோரம் மற்றும் ஏனைய பகுதிகளில் காற்றின் வேகம் 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.





