மகளுக்காக நீதிமன்றம் சென்ற லியாண்ட பயஸ்!!

495

leander Paes

இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசுக்கும், பிரபல மொடல் அழகி ரியா பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகளை பராமரிப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது.

லியாண்டர் பெயசும், ரியா பிள்ளையும் காதலித்து வாழ்க்கையில் இணைந்தவர்கள். இவர்களுக்கு அயனா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீப காலமாக பெயசுக்கும், ரியா பிள்ளைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இந்த கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தையை யார் பராமரிப்பது என்பதிலும் பிரச்சினை உருவாகியுள்ளது. முன்னதாகவே மும்பை போலீசிலும் லியாண்டர் இது குறித்து பெயஸ் புகார் கொடுத்துள்ளார்.

அதில் 8 வயதான மகள் அயனாவை, ரியா பிள்ளை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று விடலாம் என்று பயப்படுவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் லியாண்டர் பெயஸ் மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குழந்தையின் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் கருதி குழந்தை அயனாவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ரியா பிள்ளை மும்பைக்கு வெளியே குழந்தையை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று லியாண்டர் பெயஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. ரியா பிள்ளை, நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.