பிரித்தானியாவில் ஒருவரையொருவர் ஏமாற்றும் தம்பதியர்!!

313

Britan

பிரித்தானியாவில் கணவன் – மனைவிகள் பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய தம்பதிகள், தங்களது கிரடிட் கார்டுகளின் விபரத்தை தங்களுக்குள்ளேயே இரகசியமாக வைத்துக் கொள்கின்றனர்.

ஆண்களைவிட, பெண்களே கிரடிட் கார்டுகள் மூலம் தனது கணவர்களுக்கு தெரியாமல் ஷாப்பிங் சென்று தன்விருப்பம் போல், தங்களது தகுதிக்கு மீறிய அளவிக்கு பெரிய தொகையினை செலவழித்து, பொருட்களை வாங்கி விடுகின்றனர்.

பிறகு கணவன்மார்களுக்கு தெரிந்துவிட்டால் பெரிய வாக்குவாதங்களில் முடியுமே என்று எண்ணி பயந்து கொண்டு, இந்த விடயங்களை மொத்தமாகவே மறைத்து விடுகின்றனர்.

மேலும் தங்களது அன்றாட செலவிற்கு கிரடிட் கார்டை உபயோகிப்பதால், கண்களில் பட்ட விலை உயர்ந்த ஆடைகளை உடனே வாங்கிவிடுகின்றனர்.

கிரடிட் கார்டின் பில் வந்தவுடன், அதை எப்படி கட்டப் போகிறோம் என்று கவலை கொள்ளும் நேரத்தில், தனது வாழ்க்கைதுணையுடன் வாக்குவாதங்களிலும், சண்டைகளிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

JOINT – ACCOUNT வைத்திருக்கும் தம்பதியினர், ஒருவருக்கு ஒருவர் செலவு செய்வதை வரவேற்கின்றனர். ஆனால் மனைவிக்கு தெரியாமல் கனவனோ அல்லது கணவனுக்கு தெரியாமல் மனைவியோ தனியாக செலவு செய்வது கண்டுபிடித்துவிட்டால், வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் அளவிற்கு சண்டைகள் வரும் என்பதை அறிந்து, தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் இருவரின் முழு சம்மதத்துடன் செலவு செய்தால், இந்த பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் தம்பதிகள் தப்பிக்க வழியுண்டு.