ஜப்பான் தலைநகர் டோக்கியோவை குலுக்கிய பூகம்பம்!!

273

Earth

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் இதன் தாக்கம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறினர்.

இன்று அதிகாலை 5.18 மணியளவில் மத்திய டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள இஷு ஓஷிமா தீவுகளில் இந்த பூகம்பம் மையப்பகுதி அமைந்திருந்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5.8 ரிக்டர் அளவுகோலில் பூகம்பத்தின் அளவு பதிவாகியுள்ளது.
இந்த பூகம்பம் தொடர்பில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

அதே போல் இந்த பூகம்ப தாக்குதல் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.