சகோதரிக்காக வீரமரணம் அடைந்த 8 வயது சிறுவன்!!

287

boyஅமெரிக்காவில், பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற முயன்றபோது அப்பெண்ணின் 8 வயது தம்பி உயிரிழந்துள்ளான்.

அமெரிக்காவின் விர்ஜினா மாநிலத்தில், மார்டின் காப் (8) என்ற சிறுவன் தனது அக்காவோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

இதனால் மார்டின் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அக்கொடியவன் கல்லைத் தூக்கி மார்டின் தலையில் போட்டதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அந்த பெண்மணி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அண்டை வீட்டுக்காரர் கூறுகையில், மார்டின், அவரது சகோதரியை பாதுகாக்க வந்த தைரியம் பாராட்ட வேண்டியது என்றும், அவனால் தான் அவர் சகோதரி உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

8 வயது சிறுவனின் வீர மரணத்தால் அங்குள்ள அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.