உலகிலேயே விலையுயர்ந்த நாடு சுவிஸ் : ஆய்வில் தகவல்!!

300

Swiss

சுவிஸ்லாந்து உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நாடு என்று உலக வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு ஒப்பிட்டு அறிக்கை, உலகில் 177 நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரத் தகவல்கள் ஆகும்.

சுவிஸ்லாந்தின் வாழ்க்கைச் செலவு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நோர்வே, பெர்மூடா, அவுஸ்திரேலியா, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளைவிட மிக உயர்ந்த விலைவாசியுள்ள நாடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உலகிலேயே மிகவும் விலைவாசி குறைவாக உள்ள நாடுகளின் வரிசையில் எகிப்து உள்ளது, அதன் கீழ் பாகிஸ்தான், மியான்மார், மற்றும் எத்தியோப்பியாவிலும் விலைவாசி குறைவாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.

நாட்டில்பொருளதார அடிப்படையின்படி, உலகின் 10 நாடுகளின் கணக்கெடுக்கின்படி, விலைவாசி- விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் சுவீடன் ஆறாவது இடத்தையும், ஜப்பான் ஏழாவது இடத்தையும், பின்லாந்து எட்டாவது இடத்தையும், லக்செம்பன்ரு ஒன்பதாவது இடத்தையும், கனடா பத்தாவது இடத்தியும் பிடித்துள்ளது.

அமெரிக்கா உலகநாடுகளின் மிக பெரிய பொருளாதார நாடாக இருந்த போதிலும், விலைவாசி ஏற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஒப்பிட்டு பார்க்கையில் அமெரிக்கா 25வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா தனது மொத்த உளநாட்டு உற்பத்தியில் 37.1 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்று, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.