இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு! மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

484

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதாக பா லியல் நோ ய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் முடிவடைந்த காலப்பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி கூறியுள்ளார்.

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 25 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த ஆண்டு 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிள்ளைகள் இணையத்தளம் வழியாக கல்வி கற்பதால், இணையத்ளத்தில் பல்வேறு பா லியல் சம்பந்தமான கணொளிகளை பார்த்து, அதனால், ஏற்படும் து ண்டு தலே இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. பரவ காரணம் என நாங்கள் நினைக்கின்றோம்.

ஆண் பிள்ளைகளே இதில் அதிகம். 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 30 இளம் ஆண் பிள்ளைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.