கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த கொடூரம்!!

254

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் வேறு சமூகத்தவரை மணந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் தாக்கியதில் பெண்ணொருவருக்கு கர்ப்பம் கலைந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த பழைய வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஹரி. இவர் லீலாவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் கோபப்பட்ட இருவரது பெற்றோரும், பின்னர் சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த லீலாவதி, தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என கணவரை அழைத்துள்ளார். அவரும் லீலாவதியின் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு திடீரென கிராம மக்கள் பலர் லீலாவதியின் வீட்டை முற்றுகையிட்டனர். வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்தால் லீலாவை கண்டித்த கிராம மக்கள், தங்கள் சமூகத்தின் விதிகளை மீறியதாகவும், அதனால் அவரது குடும்பம் 50 ஆயிரம் அபராதத்தினை இரண்டு நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால், வறுமையில் வாடும் தங்கள் குடும்பத்தால் அந்த தொகையை செலுத்த இயலாது என லீலாவின் குடும்பம் கூறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவர்களை வசைபாடத் தொடங்கியுள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளான லீலாவின் கர்ப்பம் கலைந்துள்ளது. அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.