கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா!!

999

Trisha

நடிகை திரிஷா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார்.

அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டினார். அவர்கள் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படம் ரிலீசானது. ஜீவா ஜோடியாக நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக நடித்த பூலோகம் படம் வருகிற 23ம் திகதி ரிலீசாக உள்ளது. சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆக்குகிறார். அஜித் படமொன்றிலும் நடிக்கிறார். திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் மேல் தாண்டுகிறது. புது கதாநாயகிகள் வந்தும் அவர் மார்க்கெட்டை சரிக்கவில்லை. இப்போதும் கதாநாயகியாக நீடிக்கிறார்.