
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான கோச்சடையான் வரும் 9ம் திகதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார்.
இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் கலக்கப்போகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக தெரிய வந்துள்ளது. குறுகிய கால தயாரிப்பாக இரண்டே மாதங்களில் இப்படத்தை முடித்து, வரும் தீபாவளியின் போது திரையிட துரித ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், லிங்கா படத்தின் பூஜையுடன் கூடிய முதல் காட்சி படப்பிடிப்பு மைசூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயிலில் தொடங்கியது.
தற்போது இப்படத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே வடிவேலு சந்திரமுகி படத்தில் இணைந்து நடித்தார். இதில் ரஜினி, வடிவேலு கூட்டணியில் காமெடி கலகலப்பாக அமைந்தது. ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே தற்போது லிங்கா படத்திலும் காமெடி வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது.
வடிவேலுவுடன் 30 நாட்கள் கால்ஷிட் கேட்டு இருப்பாதாக தெரிகிறது. வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் ரிலீசாகி ஓடிக்கொண்டிக்கிறது. இந்த நிலையில் திரும்பவும் ரஜினியின் லிங்கா படத்தில் காமெடியன் வேடம் ஏற்கிறார். சந்தானமும் இதில் நடிப்பார் என தெரிகிறது.





