கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஹீரோக்களாக மாறுவது பழைய டிரன்ட். இப்போதைய தகவல் என்னவென்றால் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் ஸ்ரீசாந்த்.இது பற்றி அவரது அண்ணன் மது பாலகிருஷ்ணன் கூறுகையில், ஸ்ரீசாந்த் இந்த படத்தில் வரும் அனைத்து பாடலுக்கு இசையமைக்கிறார். ஸ்ரீசாந்த் இசையமைக்கும் இந்த படத்தில் நானும் ஒரு பாடலை பாட உள்ளேன் என்று தெரிவித்தார்.





