
2002ல் ப்ளஸ் – 2 என்ற படத்தில் கதாநாயகியாக ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுஜாதா வருணி என்ற சுஜா. இந்த படத்தை அடுத்து எந்த படத்திலும் கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை.
அதனால் கரக்டர் ரோலில் நடித்து வந்த சுஜா, பின்னர் குத்துப்பாட்டு நாயகியாகவும் நடித்து வந்தார்.இப்போது சுஜா வருணி தமிழில், அப்புச்சி கிராமம், அமளிதுமளி, காதல் தீவு, பென்சில் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் அப்புச்சி கிராமம் என்ற படத்தில் ஒரு வித்தியாசமான கரக்டரில் நடித்திருக்கிறாராம் சுஜா.இது பற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு காமெடியனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். மேலும் இப்படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் உள்ளது.
அதில் ஒரு பாடலை கேட்டால் மட்டும் எனக்கு அழுகை வந்துவிடுகிறது. இதுவரை நான் நடித்த எந்த பாடலும் என்னை கண்கலங்க வைத்ததில்லை.இந்த படத்தை ரசிகர்கள் பார்க்கும் போது நான் சொல்வதை உணர்வார்கள் என்றார் சுஜா.





