ஒரு தலைக் காதலால் திருமணமாகி 3 மாதத்தில் இளம் பெண் கொடூமாக கொலை செய்யப்பட்ட விபரீதம்!!

271


knif

போரூர் ஏரியில் நேற்று முன்தினம் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை பொலிசார் கைப்பற்றினார்கள். கை, கால்களை தனியாக துண்டித்தும், உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டியும் ஏரியில் வீசி இருந்தனர்.



மிக கொடூரமாக கொலையுண்ட அந்த பெண் யார், கொலையாளிகள் யார், என்பது பற்றி போரூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடாத்தினார்கள்.

காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். அப்போது சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரேகா(24) என்ற பெண் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் ஸ்ரீராம் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று உடலை காட்டினார்கள். அதைப் பார்த்ததும் ஸ்ரீராம் கறி அழுதார். கொலை செய்யப்பட்டிருப்பது மனைவி ரேகா தான் என்று உறுதிப்படுத்தினார்.



ரேகாவுக்கும் ஸ்ரீராமுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. ஸ்ரீராம் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


ரேகா எம்.ஜி.ஆர் நகரில் ஜிம்மில் பணிபுரிந்து வந்தார். கடந்த 1ம் திகதி காலையில் ஜிம்முக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ கடத்தி கொலை செய்து இருக்கிறார்கள்.

பொலிசார் விசாரணையில் மாதவரத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் சாம்சன், ரேகாவை ஒரு தலையாக காதலித்தது தெரிய வந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு ரேகா கிண்டியில் ஒரு கோல்சென்டரில் வேலை பார்த்தார். அப்போது சாம்சன் அந்த நிறுவனத்துக்கு கார் ஓட்டி இருக்கிறார்.


அடிக்கடி ரேகாவை பின் தொடர்ந்த சாம்சன் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் ரேகா ஸ்ரீராமை காதலித்து வரும் விஷயத்தை கூறி தன் மீது ஆசைப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் சாம்சனால் ரேகாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ரேகாவை பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி ரேகா தனது காதலர் ஸ்ரீராமிடம் தெரிவித்து இருக்கிறார்.

சாம்சனின் தொந்தரவு பொறுக்க முடியாமல் ரேகா வேலைக்கு செல்ல வில்லை. இந்த நிலையில் ரேகா – ஸ்ரீராம் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகும் சாம்சன் ரேகாவை பின் தொடர்ந்துள்ளார்.

ரேகா இன்னொருவருக்கு மனைவியாகி விட்டதால் தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் சாம்சன் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


சாம்சன் வீட்டுக்கு பொலிசார் சென்ற போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். செல்போனும் நிறுத்தப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.