நம்பவைத்து ஏமாற்றிய பெற்றோர் : 12ம் வகுப்பு மாணவி காதலனுடன் எடுத்த விபரீத முடிவு!!

339

சேலத்தில்..

கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகான வாழ்க்கை சூன்யத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களிடையே பொறுமையும், எதிர்த்து போராடும் குணமும் குறைந்து விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளது.

தனது காதலனுடன் திருமணத்திற்கு சம்மதிக்காமல், ஏமாற்றியதற்காக 12ம் வகுப்பு மாணவி, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது பெற்றோரை அதிர செய்துள்ளது. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி, கோபி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது காதலியைப் பெண் கேட்டு காதலியின் வீட்டிற்கு சென்ற கோபியிடம், மாணவியின் பெற்றோர், அவள் இப்போது தான் பள்ளிக்கு செல்கிறாள். பிறகு பார்க்கலாம் என்று நல்ல விதமாக சொல்லி விட்டு, அதன் பிறகு அவளை பள்ளிக்கும் அனுப்பாமல், அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளைத் தேட துவங்கியிருக்கிறார்கள்.

காதலர்களின் திருமணத்திற்கு சம்மதிக்காமல், பள்ளிக்கும் அனுப்பாததால், காதல் ஜோடி பாஸ்பேட் மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கோபிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கோபியும், 12ம் வகுப்பு மாணவியும் காதலித்தப்படியே பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கோபி, பள்ளி மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மாணவியின் பெற்றோர், அவள் சிறுமி. அவளுக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர், மாணவியை, பள்ளிக்கு அனுப்புவதையும் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் தங்களது திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று அஞ்சி, மாணவியும், கோபியும் தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இருவரையும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இருவரும் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.