
கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அண்மையில் வளிமண்டலத்தில் காணப்பட்ட வளிமண்டலக் குழப்பமானது நேற்றுக்காலை தாழமுக்க பிரதேசமாக வலுவடைந்தது. அது இலங்கைக்கு மேற்காக தற்போதும் காணப்படுகிறது.
பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் நாட்டின் அனேகமான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
அத்துடன் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளிலும் மழை காணப்படும். இடியுடன் கூடிய மழை காணப்படும் பொழுது காற்று சற்றுப்பலமானதாக வீசும்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..
இந்தத் தாழமுக்கப் பிரதேசம் உருவாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள மேகக் கூட்டங்களின் அதிகரிப்பினால் புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடான மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
சாதாரணமாக கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசும்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் திடீரென அதிகரிப்பதுடன், கடலும் திடீரென சில சந்தர்ப்பத்தில் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.





