இலங்கையில் குறைந்துவரும் தங்கத்தின் தேவை : விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

598

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினால் தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களில் பாரிய வீழ்ச்சியுடன் பதிவான ஆபரண தங்கத்தின் விலை தற்போது பதிவாகி வருவதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இலங்கை தங்க சந்தையில் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 156,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 169,000 ரூபாவாகவும் தற்போது பதிவாகியுள்ளது.

நாட்டில் தங்கத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினால் தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள பல நகைக்கடைகளை மூடும் போக்கு காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.