தமன்னாவின் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?

435

Tamana

தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சம்பளம் 1 கோடியை எட்டியுள்ளது என்கின்றனர்.

பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கதாநாயகிகள் சிலர் குத்தாட்டம் ஆடுகிறார்கள். இதற்கு கூடுதல் தொகையும் பலமாக வாங்குகின்றனர். நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், அஞ்சலி, பிரியாமணி உள்ளிட்ட பலர் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர்.

உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் சில நிமிடங்கள் கௌரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். அதற்கு அவர் 10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை ஒரு மணி நேரத்தில் படமாக்கி விடலாம்.

அதற்கு 10 லட்சம் கேட்கிறாரே என்று படக்குழுவினர் யோசித்ததாகவும், இறுதியில் அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நண்பேன்டா படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.