முடி கொட்டியதால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

297

கோழிக்கோட்டில்..

முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்த பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். முடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரில் எழுதப்பட்ட தற்கொலைக் கடிதம் கிடைத்தும் போலீசார் விசாரணையை தாமதப்படுத்துவதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இளைஞன் உயிரிழந்தது குறித்து உறவினர்கள் அதோலி போலீசில் புகார் அளித்தனர். ஆனால், தற்கொலைக் குறிப்பில் மருத்துவர் பெயர் இருந்தும், போலீசார் தீவிர விசாரணை நடத்தத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த் 2014 முதல் முடி உதிர்தலுக்கு சிகிச்சை பெற்றார். அந்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் முடி முழுவதும் உதிர்ந்துவிடும், பிறகு நல்ல முடி கிடைக்கும் என்று பிரசாந்திடம் மருத்துவர் கூறினார்.

மருந்து சாப்பிட ஆரம்பித்தவுடனே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையில் மட்டுமல்லாமல், கை, புருவங்களிலும் முடி உதிர ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலைக் கடிதத்தில் இவை அனைத்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பிரசாந்த் எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பில், கை, புருவங்களில் முடி உதிர்வதைக் கண்டு சகிக்க முடியாமல் வெளியே சென்று மக்களை எதிர்கொள்ள சிரமப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிரசாந்த் மரணம் தொடர்பாக மருத்துவர் மீது குடும்பத்தினர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதோலி போலீசிடம் முதலில் புகார் அளித்தனர்.

நடவடிக்கை எடுக்காததால், கோழிக்கோடு ரூரல் எஸ்பியிடம் புகார் அளித்தனர். எனினும், முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் தவறிழைத்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.