மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த பாடசாலை மாணவனை காணவில்லை என அம்மாணவனின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
கேசவன் ஸ்ரீபன் என்ற களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆண்டு 7 இல் கல்வி பயிலும் மாணவனே காணாமல் போயுள்ளதாக தாயார் தெரிவிக்கின்றார்.
தனது அம்மப்பாவின் வீட்டிற்கு ஓந்தாச்சிமடம் சென்று திரும்பி வருகையில் தனது மகன் காணாமல் போயுள்ளதாக தாயார் தெரிவிக்கின்றார்.
நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் ஓந்தாச்சிமடத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் காணாமல் போயுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேசவன் ஸ்ரீபன் என்ற மாணவன் ஜஸ்ரின் எனவும் அழைக்கப்படுவதாகவும் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.





