குவைத்தில் மின்சாரம் செலுத்தி இலங்கைப் பெண் படுகொலை!!

589

Shockகுவைத்தில் பணிப்பெண்ணாக இருந்த பெண் ஒருவரின் மீது மின்சாரத்தை செலுத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குவைத்தில் ரீகா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர் பணி புரிந்து வந்த வீட்டு உரிமையாளரின் மகள் இவ்வாறு மின்சாரத்தை குறித்த பெண் மீது செலுத்தி இருப்பதாக குவைட்டில் வெளியாகும் பத்திரிகை ஒன்றை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.