உண்ட வீட்டுக்கு துரோகம் : மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை!!

250


தமிழ் நடிகர்..பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் அவரது மனைவியை கட்டிப்போட்டு நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது.இங்கு நடிகர் ஆர்.கே அவரது மனைவி ராஜி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ஆர்.கே-வின் மனைவியை கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர், அத்துடன் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி கொன்று விடுவதாக மிரட்டியதுடன், அவரை கட்டிப்போட்டு நகை, பணம் இருக்கும் இடத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.


20 நிமிடத்திற்குள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை அனைத்தையும் சுருட்டிய 3 கொள்ளையர்களும் வந்த வழியே வெளியேறியுள்ளனர். அதன்பின் வீட்டிற்கு வந்து பார்த்த ஆர்.கே, தனது மனைவி ராஜி கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார், இதையடுத்து உடனே ஆர்.கே சார்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.கே-வின் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து 200 சவரன் நகை, அத்துடன் 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். கை ரேகைகள் என அனைத்தையும் ஆராய்ந்த போலிசார், ஆர்.கே-வின் மனைவிடம் வாக்குமூலம் பெற்றனர்.


அத்துடன் வீட்டின் சிசிடிவி-யை ஆராய்ந்த போலிஸார், கொள்ளையடித்தவர்களில் ஒருவர் அவர் வீட்டில் பணியாளராக இருந்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆவார். அவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.