வவுனியாவில் மாவீரன் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழாவின் புத்தகக் கண்காட்சி!!

678

பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழா..

வன்னி கலை பண்டபாட்டுக் கூடமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் மாவீரர் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழாவின் ஓர் அங்கமாக புத்தகக்கண்காட்சி இடம்பெற்றது.

குறித்த புத்தகக் கண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (12.11.2022) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானதுடன் வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை நாடா வெட்டி புத்தகக்கண்காட்சியினை திறந்து வைத்தார்.

கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் நடராஜர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை , கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கிய குழு செயலாளர் மதுசுதன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை,

கொழும்புத் தமிழ்ச் சங்க மாங்குளம் கிளை தலைவர் கிந்துஜன், கொழும்புத் தமிழ்ச் சங்க செயற்பாட்டாளர்கள் பிரேம், தனுஸ், தவபாலன், வன்னி கலை பண்பாட்டுக்கூடத்தினர், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கண்காட்சிக்கான புத்தகங்களை வவுனியா பண்டார வன்னியின் புத்தகசாலையினர் வழங்கியிருந்தமையுடன் குறித்த கண்காட்சி 2022.11.12ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும் மற்றும் 13ம்திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையும் இடம்பெறும்.