கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பேகர்!!

836

Burgerஇங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜோன் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர பேகர் உணவு தயாரித்துள்ளனர்.

அந்த பேகர் இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள் மற்றும் பிஷா வகைகள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந்த பேகர் மொத்தம் 5 கிலோ 175 கிராம் (11½ பவுண்டு) எடையுள்ள மாட்டு இறைச்சி சேர்க்கப்பட்டிருந்தது.

மேலும் அதில் பல அடுக்குகளில் நெய் ஊற்றப்பட்டிருந்தது. இது 30 ஆயிரம் கலோரி திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டது. இதுவரை இது போன்ற பர்கர் தயாரித்தது இல்லை. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.