நாய்களுக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம் : கண்ணீர் சிந்திய உரிமையாளர்!!

684

இந்தியாவில்..

வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் விலங்குகள் உரிமையாளர்களுக்கு பெற்ற பிள்ளைகள் போன்றே காணப்படுகின்றது. இதனால் செல்லப்பிராணியை பிள்ளைகளாக பாவித்துவரும் உரிமையாளர்கள் அதற்கு பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம் என கொண்டாட்டத்தில் ஏற்பாடு செய்கின்றனர்.

இந்தியாவில் ஹரியானா மாநிலம், குருகிராமில் நாய்களின் உரிமையாளர்கள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஷெரு(ஆண் நாய்), ஸ்வீட்டி(பெண் நாய்) என்ற இரண்டு நாய்களுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு, மனிதர்களின் திருமணம் முறைப்படி, பெண் நாயின் உரிமையாளர், ஆண் நாயின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி இவ்வாறு திருமணம் நடத்தியுள்ளனர்.

மேலும் இந்த திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் என வழங்கியதோடு, வாட்ஸ்அப்பிலும் உறவினர்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே புத்தாடையும் எடுக்கப்பட்டு, தங்களது பிள்ளைகளைப் போன்று திருமணம் நடத்தியுள்ளனர். பெண் நாய் உரிமையாளர் கூறுகையில், தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஸ்வீட்டியை தங்களது மகள் போன்று வளர்த்ததாக கூறியுள்ளார்.

கணவர் கோவிலுக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வழங்கிவிட்டு வருவார், அப்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாய் தனது கணவருடனே வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆண் நாய் ஷெருவின் உரிமையாளர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக தங்களது குழந்தை போன்று வளர்த்து வரும் எனது நாய்க்கு ஏன் திருமண சடங்கு நடத்தக்கூடாது என்ற யோசனை எழுந்தது என்று பின்பு குடும்பத்தில் பேசி முடிவு செய்து இவ்வாறு திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு நாய்க்கு திருமணம் செய்து வைத்தால், பொலிசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும், சிலர் தங்களை பார்த்து கிண்டல் செய்ததாகவும் கூறியுள்ளனர்.