வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் போதை ஒழிப்பு விழிப்புணர்வும்!!

469

அல் இக்பால் மகாவித்தியாலயத்தில்..

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையும் இன்று (16.11) பாடசாலையில் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத்தால பண்டார, உளுக்குளம் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி பிரியங்கா ஆகியோர் சின்னத்தை அணிவித்து வைத்தனர்.

அத்துடன், மாணவர்களுக்கான ஒழுக்கம், போதைப் பொருள் பாவனை, சிறுவர் வன்முறை மற்றும் துஸ்பிரயோகம் தொடர்பில் உளுக்குளம் பொலிசாரால் விழிப்புணர்வூட்டும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டதுடன், சின்னம் சூட்டும் நிகழ்வை முன்னிட்டு மர நடுகையும் இடம்பெற்றது.

நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜெசீம், பாடசாலை ஆசிரியர்கள், பொலிசார், மாணவர் தலைவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.