வவுனியா வைத்தியசாலையில் உயிருக்கு போராடும் இளைஞருக்கு புளொட் மோகன் அவர்களினால் உதவி!!(படங்கள்)

474

3 4 5

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினரின் அனுசரணையில் நேற்றைய தினம் கோவில்குளம் கழக ஸ்தாபகர் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலையின் 1ஆம் இலக்க நோயாளர் விடுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் அரிசியாலை ஒன்றில் வேலையின் போது எரியும் உமியினுள் தவறுதலாக விழுந்த 20 வயது இளைஞரின் மோசமான உடல்நிலை தொடர்பில் அவருக்கு உதவிகோரி இணையத்தளங்களில் வெளியான படங்களின் நிமிர்த்தம் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் டிலக்சன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க கனடா கிளை அனுசரணையில் அவருக்கு தேவையான பெறுமதியானதும் உடனடியாக தேவைப்படும் பொருட்கள், சிறுதொகை பணம் என்பவற்றை புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் நேரில் சென்று வழங்கியதுடன் இளைஞரின் குடும்ப பொருளாதார நிலை மற்றும் உடல்நிலை என்பன கேட்டறியப்பட்டதுடன், தொடர்ந்து எங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடும் எமது இளைஞரை காப்பாற்ற நல்லுள்ளம் படைத்தவர்கள், இவருக்கு உதவி புரிய இயலுமானவர்கள் வைத்தியசாலையின் 1ஆம் இலக்க நோயாளர் விடுதியில் நேரில் சென்று வழங்க முடியும் எனவும் அல்லது கோவில்குளம் இளைஞர் கழகத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என கோவில்குளம் இளைஞர் கழக சமூக விரிவாக்கல் பிரிவினர் தயவுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

இவ் விஜயத்தில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மற்றும் கழக முக்கியஸ்தர்களான சுரேஷ்குமார், சதீஸ், காண்டீபன், நிகேதன் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக விரிவாக்கல் பிரிவு,
கோவில்குளம் இளைஞர் கழகம்,
இல. 58, 5ம் ஒழுங்கை,
கோவில்குளம்,
வவுனியா.