இறந்துபோனதாக கூறப்பட்ட குழந்தை 6 நாட்களின் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக கடந்த 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சாந்தினி ஜெயதிலக்க என்ற தாய் 26 வாரங்கள் என்ற நிலையில் ஏப்ரல் 30 ஆம் திகதியன்று குறைப்பிரசவம் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
இதன்போது குழந்தை இறந்து விட்டதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் அறிவித்தனர். இதனையடுத்து தாயும் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மே 6 ஆம் திகதியன்று இறந்துபோன தமது குழந்தைக்கான சாந்திகளையும் பெற்றோர் செய்துமுடித்தனர்.
இதன்போதே வைத்தியாலையில் இருந்து குறித்த குழந்தை உயிர்பெற்றுவிட்டதாக தகவல் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள வைத்தியசாலையில் பணிப்பாளர் சாதாரணமாக 26 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் பிழைப்பது அரிது.
இந்தநிலையில் வைத்தியசாலையின் பணியாளர்களின் அதீத முயற்சியின் காரணமாகவே குழந்தை உயிர்பெற முடிந்தது என்று குறிப்பிட்டார்.